The First Hospital of Sri Lanka for Non Communicable Disease

Friday, July 13, 2018

போதைப் பொருள் என்னும் கொடிய சமூகப் பயங்கர வாதத்திலிருந்தும் தொற்றாநோயிலிருந்தும் எமது சமூகத்தைப் பாதுகாப்போம்.

போதைப் பொருள் என்னும் கொடிய சமூகப் பயங்கர வாதத்திலிருந்தும் தொற்றாநோயிலிருந்தும் எமது சமூகத்தைப் பாதுகாப்போம்.

நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் மாதாந்தம் நடைபெறும் நீரிழிவு நோயழர்களுக்கு கிளினிக் இம்மாதம் 10 ஆம் திகதி செவ்வாயக்கிழமை அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம். நக்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுமார் 80 இற்கு மேற்பட்ட நோயாளர்களுக்கு இலவசமாக நீரிழிவு நோய்க்கான இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் கலந்து கொண்ட சகல நோயாளர்களுக்கும் ஒரு மாத காலத்திற்குத் தேவையான மருந்துப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அவ்வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய உத்தியோகத்தர் வைத்தியர் யூஸுப் அவர்களும் கலந்து கொண்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட நோயாளர்களுக்கு போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் விழைவுகள் தொடர்பாகவும், போதைப் பொருள் நீரிழிவு நோயில் செல்வாக்குச் செலுத்துவது பற்றியும் விரிவாக அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம். நக்பர் அவர்களினால் விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் போசனை நிறை, போசாக்கு உணவு பழக்க வழக்கங்கள் தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் வைத்தியர் கே.எல்.எம். நக்பர் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட உரையின் ஒரு பகுதியினை சுருக்கமாக இங்கு பதிவிடுகின்றோம்.

30 வருட காலமாக தொடர்ந்து இந்நாட்டின் பொருளாதாரத்தையும் நின்மதியான சூழலையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய கொடிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருப்பினும் யுத்தத்தை விடக் கொடுமையான போதைப் பொருள் பயங்கரவாதம் நாள் தோரும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
2020ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு போதைப் பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்கள் இலங்கை அரசினால் மும்முரமாக செயற்படுத்தப்படுகின்ற போதும் போதைப் பொருள் பாவனை, விற்பனை மற்றும் அவற்றுடன் தொடர்புற்ற செயற்பாடுகள், சமூக சீரழிவுகள் தற்போது எமது நாடு எதிர்நோக்கும் மிகப் பெரும் சவாலாகும்.

ஹெரோயின், மர்ஜுவானா, கஞ்சா, அபின், சாராயம், கசிப்பு, பியர், சிகரட், சுருட்டு, பீடி என்று பல்வேறுபட்ட பெயர்களில், வகைகளில் காணப்படும் இவற்றினால் அதிகம் கவரப்பட்டு பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது இளைஞர் யுவதிகளே.
வேலைவாய்ப்பின்மை,மேற்கத்தேய காலசார மோகம், தனிமை, கடின உழைப்பு, மகிழ்ச்சி, திருப்தி, ஆட்ம்பரம், மனக்கவலைகளை மறத்தல், சோர்வைப் போக்கல் போன்ற போதைப் பொருற்களின் பயன்கள் பற்றிய பழையான புரிதல்கள், நம்பிக்கைள் ஆசைஊட்டும் போலியான விம்பங்களைப் பிரதிபலிக்கும் விளம்பரங்கள், போதைப் பொருள் பாவிப்பதனை நாகரிகமாக அல்லது ஸ்டைலாக சித்தரிக்கும் திரைப்படக் காட்சிகல் போற் பல்வேறுபட்ட காரணங்களின் அடிப்படையிலேயே இன்றைய இளை சமூதாயம் போதைப் பொருளின்பால் அதிக ஈடுபாடுகாட்டுகின்றனர்.

அதிலும் குறிப்பாக 15 முதல் 20 வயதுக்கும் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகுவதன் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதற்கு நாடுபூராகவும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 3000 இற்கும் அதிகமான அரச அங்கீகாரமளிக்கப்பட்ட மதுபானசாலைகள் துணை நிற்கின்றன. இது தவிர சட்டத்துக்குப் புறம்பான எண்ணிலடங்காத மதுபான வியாபார நிலையங்களின் உதவியும் தராளமாகவே கிடைக்கின்றன.

இதன் விளைவு 2015 ஆம் ஆண்டு இலங்கையில் போதைப்பொருட்கள் சம்பந்தமான குற்றச்செயல்களுக்காக கைது செயப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,482ஆவதோடு இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகரித்துள்ளதனை அவதானிக்க முடிகின்றனது. இவர்களில் 32 சதவீதம் ஹெரோயினை வைத்திருந்ததற்காகவும் 63 சதவீதம் கஞ்சா தொடர்பான குற்றச்செயல்களுக்காகவும் கைது செயப்பட்டுள்ளனர்.
இது தவிர  1000 இற்கு 1 என்ற அடிப்படையில் மாணவர்கள் புகைத்தல் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ளதாக சமகால ஆய்வு அறிக்கைகள் மூலம் குறிப்பிடுகின்றன.
30 வருடம் நடைபெற்ற யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் மொத்தத் தொகையை விடவும் போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிககமாகும். வருடந்தோரும் 47 ஆயிரம் பேர் போதைப் பொருள் பாவனையினால் மாத்திரம் உயிரிழக்கின்றனர். எனவே யுத்தத்தினை விட மிகப் பெரும் பயங்கரவாதமாக போதைப் பொருள் பாவனை பார்க்கப்படுகின்றது.

போதைப் பொருள் பாவனையானது கலாசார சீரழிவுகள், கொலை, கொள்ளை, கற்பழிப்புப் போன்ற பல்வேறுபட்ட சமூக விரோத செயற்களில் ஈடுபடுவதற்கு இளைஞர்களைத் தூண்டுவதுடன் அவர்களை இன்று அதிகரித்து வரும் தொற்றாநோயளர்கள் பட்டியலிலும் இணைத்து விடுகின்றது.
போதைப் பொருள் பாவனையினால் புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு, ஆண்மையின்மை அல்லது மலட்டுத்தன்மை போன்ற பல்வேறுபட்ட நோய்களைத் தோற்றுவிப்பது போன்றே நீரிழிவு நோயினை ஏற்படுத்துகின்றது.

இன்று இளம் வயதிலேயே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப் பொருள் பாவனைப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்த அல்லது கொண்டிருப்பவர்களே.
எமது சமூகத்தில் இன்று அதிகரித்து வரும் மிகப் பெரும் தொற்றா நோயான நீரிழிவு நோய் உட்பட தொற்றா நோயைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக சமூக ரீதியாக ஒற்றுமைப் பட்டு கிராமங்கள் தோறும் சமூக விழிப்புணர்வுக் குழுக்களை உருவாக்கி போதைப் பொருள் பாவனைப் பயங்கரவாதத்திற்கு ஏதிராக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். 

Mission
 • By rendering the highest Ayurvedic treatment by dedicates team of officers to the patients to their entire satisfaction.
 • ARH as a center of excellence in Non Communicable Disease and also research related to the field of Ayurveda and Unani medicine.
 • To undertake research on the treatment of NCD prevalent in the country using the Ayurveda & Unani systems of medicine.

Vision
To render the highest and best Ayurvedic service to every members of the society by highly proficient medical officer.
Objective
 • To do collaborative & exchange programmes with other institutes of the country and for the development of Ayurvedic & Unani systems of medicine.
 • To generate public awareness about the potential of Ayurveda & Unani systems of medicine for enhancing health security of communities including NCD prevention & health promotion.
 • To utilize the medicinal plants in the region & encourage the society towards the Ayurveda /Unani Medicine.
 • Maintain Herbal garden in 30 schools and 20 Ayurvedic Hospitals/ Dispensaries in the area & give awareness on Herbs, form Herbal plant bank at Ayurvedic Research Hospital(NCD), Ninthavur.``
 • Conducting grand scale mobile clinic with the participation of medical experts.
 • Conducting special clinic for selected NCDs – diabetes, chest disease, chronic kidney disease, cholesterol.
 • Conducting Health education programmes especially Traditional NCD Food.
 • Ayurvedic Healthy Life (NCD) for School Teacher & Students Programmes – to establish traditional food habits in the society.