சர்வதேச உளநல தினத்தினை (World Mental Health Day ) முன்னிட்டு நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் சர்சவேத உளநல தினமான 2018.10.10 ஆம் திகதி உள நல மருத்துவ ஆலோசனைக் கிளினிக் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுமார 108 பொதுமக்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதன்போது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி வைத்தியர் கே.எல்.எம். நக்பர் அவர்களினால் அன்மைக்காலமாக அதிகரித்து வரும் உளவில் நோய்கள் தொடர்பாகவும் அதனால் ஏற்பட்டுவரும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் தெளிவாகவும் விரிவாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கடந்த ஒரு வருட காலமாக நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினால் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் குடும்ப, சமூகப் பிரச்சினைகளுடன் சேர்த்து பிழையான உணவுப் பழக்க வழக்கங்களுமே உளவியல் நோயாளர்கள் அதிகரித்து வருவதற்கான பிரதான காரணமாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன் எதிர்கால சந்ததியினரை மன அழுத்தங்கள் அற்ற உளவியல் பாதிப்பற்ற சிறந்த சந்ததியினராக உருவாக்க வேண்டுமாயின் எவ்வாறான வழிமுறைகளை பெற்றோர்களும் சமூகப் பொறுப்பாளர்களும் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்தார்.